அமெரிக்காவின் நியூயோர்க் நகரைப் புரட்டிப்போட்ட திடீர் வெள்ளத்தில் நியூ ஜெர்சி பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடுமையான புயலில் கார்களும் ரயில் நிலையங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டித் தீர்த்த மழையால் வட்டாரத்தின் விமான நிலையங்கள், பெருவிரைவுச் சாலைகள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.