ஈராக்கின் வாசித் மாகாணத்தில் உள்ள அல்-குட் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இன்று (17) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து தொடர்பான தொடக்க விசாரணை முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசித் மாகாண ஆளுநர் முகமது அல்-மியாஹி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதுடன், தீ விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் பெரும்பகுதி முழுவதுமாக எரிந்த நிலையில், புகை மூட்டங்கள் வெளியேறுவதைக் காண்பிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.