நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை வருகை தரவிருந்த பொலிவுட் கிங் கான் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக Talent Agency நிறுவனமான WizCraft வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உல்லாச விடுதியான City of Dreams Sri Lankaவின் சிறப்புமிக்க ஆரம்ப விழா நிகழ்விற்கு முன்னதாக, ஷாருக்கான் கலந்துகொள்வது கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக திட்டமிடப்பட்டிருந்தது.
துரதிஷ்டவசமாக, அவரது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எதிர்பாராத தனிப்பட்ட காரணங்களால், ஷாருக்கான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.