எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மாற்றும் நோக்கில் கட்சிக்குள் உள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவிட்டதாக பரவும் வதந்திகளை, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முற்றாக நிராகரித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து எந்தவிதமான கலந்துரையாடலும் கட்சிக்குள் இடம்பெறவில்லை. இந்தவகை வதந்திகள், கட்சியையும் அதன் தலைவரையும் அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியாகவே தோன்றுகின்றன. இது அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் செயல்படும் சதியாகவே பார்க்கப்படுகிறது,” எனக் குற்றம்சாட்டினார்.
அத்துடன், தயாசிறி ஜயசேகர பற்றி பேசும் போது,
“தயாசிறி ஒரு திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. இவரைப் போன்றவர்கள் கட்சியில் இணைவது, கட்சியின் வலிமையை அதிகரிக்கும்,” என்றும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.