follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP2PAFFREL அமைப்பினால் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு

PAFFREL அமைப்பினால் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு

Published on

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு (PAFFREL) அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த பாராளுமன்றம் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இந்தச் செயலமர்வில் “அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பாராளுமன்றத்தின் செற்பாடு” என்ற தொனிப்பொருளில் பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயமுமான சமிந்த குலரத்ன விளக்கமளித்தார்.

அத்துடன், பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான ஜயலத் பெரேரா, “பாராளுமன்றத்தின் குழு முறைமை” பற்றி பெண் தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்தச் செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி, பாராளுமன்றத்தின் நடைமுறைகள் பற்றி அறிவதற்கு மிகவும் பொருத்தமான குழுவுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தமைக்குப் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மருத்துவமனைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ...

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய 1,489 வைத்தியர்கள்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இதனால்...

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு...