follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1மழையும் காற்றும் மீண்டும் உச்சம் - எச்சரிக்கையுடன் இருக்கவும்

மழையும் காற்றும் மீண்டும் உச்சம் – எச்சரிக்கையுடன் இருக்கவும்

Published on

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவில் ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 55-60 கி.மீ. வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் மிதமான கடும் காற்று வீச வாய்ப்புள்ளது.

பலத்த காற்று மற்றும் மழையால் ஏற்படக்கூடிய விபத்து அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீடு சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 31 ஆம் தேதி வரை...

மனுஷவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் பிணையில்...

வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணிபுரிந்த ஈ.ஏ.பி.என். எதிரிசிங்க 2025.07.08ஆம் திகதி முதல் அரச சேவையிலிருந்து ஓய்வு...