2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையை வந்தடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1.3 மில்லியனை தாண்டியுள்ளது என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
தகவலின்படி, இதுவரை மொத்தமாக 1,313,232 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
அத்துடன், 2025 ஜூலை மாதத்தின் இதுவரையான நாட்களில் மட்டும் 145,188 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை நோக்கி பயணித்துள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து மட்டும் 27,786 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி, இலங்கையின் சுற்றுலா துறையில் நிலவுகின்ற மீட்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.