லிந்துலை – மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் முதுகுத் தண்டுவடம் காயமடைந்துள்ளதால், அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுபோதையுடன் அதிக வேகத்தில் வண்டி ஓட்டப்பட்டு, வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சாரதி மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அதிகளவில் மதுபோதையில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.