follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP1பறவைகள் பூங்கா உரிமையாளர் பிணையில் விடுவிப்பு

பறவைகள் பூங்கா உரிமையாளர் பிணையில் விடுவிப்பு

Published on

சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (30) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு, ரூ. 2 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் விதித்து நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அண்மையில், நகரவெவ பறவைகள் பூங்காவிலிருந்து 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சைக்கிள்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ. 1.5 மில்லியன் மதிப்புடையதாக இருப்பதுடன், இவை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானம்

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று நீதிமன்றுக்கு

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (31) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சட்டவிரோதமான...

நீதித்துறை விவகாரங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் – பிரதம நீதியரசர்

புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட பிரீதி பத்மன் சூரசேனை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் இன்று (31) கொழும்பு உயர்...