நாட்டின் பல பகுதிகளில் தற்போது மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதால் மேற்படி மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சாரசபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்றுமுன்தினம் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.