24ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள ஸ்மார்ட் தொலைபேசி மற்றும் அட்டை முறை பஸ் கட்டணம்

920

ஸ்மார்ட் தொலைபேசி கையடக்கத் தொலைபேசியின் ஊடாக, QR CODE நடைமுறையை பயன்படுத்தி, கட்டணம் செலுத்தும் நவீன முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், அட்டை முறைமை மற்றும் QR CODE நடைமுறை ஆகிய புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டணம் செலுத்தும் திட்டத்தை எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, 163 இலக்க பஸ் மார்க்கமான தெஹிவளை – பத்தரமுல்ல மார்க்கத்தின் பயணிக்கும் ஒரு பஸ்ஸில் இதனை முதல் கட்டமாக அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும், விரைவில் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here