தலதாமாளிகைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெலவினால் வரவேற்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்.
வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து கௌரவ பிரதமர் அவர்கள் மல்வத்து மஹா விகாரை பீட மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
அனுசாசனத்தை தொடர்ந்து வணக்கத்திற்குரிய தேரர் பிரதமருக்கு புத்தர் சிலையொன்றை பரிசளித்தார்