திட்டமிட்டப்படி இன்றைய தினம் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார சபைக்கு புதிய பொது முகாமையாளரை நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது உட்பட பல விடயங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் செயற்குழு உறுப்பினர் சரித ஜயநாத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சரித ஜயநாத் தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ வளாகத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் இன்று பிற்பகல் 05.00 மணியளவில் மூடப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ வளாகம் அமைப்பிலிருந்து அகற்றப்பட்டால் 300 மெகாவோட் திறன் இழக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே இன்று முதல் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.