ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் நேற்று ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொதுமக்கள் தலத்தின் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது
உலகளாவிய சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது.