follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1நாட்டு மக்கள் தியாகங்களை செய்யத் தயாராக இருக்க வேண்டும் - ஜனாதிபதி

நாட்டு மக்கள் தியாகங்களை செய்யத் தயாராக இருக்க வேண்டும் – ஜனாதிபதி

Published on

இலங்கையில் முதலீடு செய்ய வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ , தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர தின நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் தெரிவிக்கையில்..

நாட்டில் மத ,ஊடக சுதந்திரம் இருக்கின்றது.கருத்து சுதந்திரம் இருக்கின்றது.பொறுப்புகளை நிறைவேற்றாமல் எவரும் உரிமைகளை பற்றி பேசக்கூடாது.அரசியல் , பொருளாதாரம் நாட்டில் பலமாக இருக்க வேண்டும்.நாட்டின் தலைவர் ஒருவர் , பிரச்சினைகளை தினசரி எதிர்நோக்கவேண்டியுள்ளது. ஒரு இலக்கை நோக்கி செயற்படுவது இலக்கல்ல. சில சமயம் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் எமக்கு எதிராக செயற்படுகின்றன.மக்கள் இவற்றை புரிந்துகொள்ள வேண்டும் ,  நாட்டின் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன், சிறந்த நிலைப்பாடுகளால் நாம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

புதிய உலகத்துடன் நாம் போட்டியிட வேண்டுமானால் நாம் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கடினமான காலம் என்றென்றும் நீடிக்காது, கடினமான காலங்களை எதிர்கொள்ள வலிமையானவர்கள் தேவை. அதனால் மற்றவர்களை மனதளவில் புண்படுத்தும் யாரும் சமுதாயத்திற்கு எந்த உதவியும் செய்வதில்லை. நாம் சந்திக்கும் பிரச்சனைகள் நீண்ட கால பிரச்சனைகள் அல்ல.

பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாதென கூறப்பட்டது. ஆனால் நாங்கள் வென்றோம். நாங்கள் எமது சவால்களை வெல்ல திடசங்கற்பம் பூண வேண்டும். அர்ப்பணிப்பு, தியாகங்களை செய்யவேண்டும். நாட்டை பாதுகாக்கும் தலைவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

எந்தவொரு காரணத்திற்காகவும் அடிப்படைவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படமாட்டாது. கடந்த காலங்களில் சவால்கள் சமாளிக்கப்பட்டது போன்று அடுத்த வருடங்களிலும் நாம் சவால்களை வெல்வோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கை

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை...

பிரதமரின் தேர்தல் விதிமீறலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய...

பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – எதிர்க்கட்சித் தலைவர்

பலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருப்பதாகவும்...