follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1திருப்பதி விஜயம் : பிரதமரிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

திருப்பதி விஜயம் : பிரதமரிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

Published on

தனிப்பட்ட ஜெட் விமானம் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் திருப்பதிக்கு விஜயம் செய்தமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு சட்டத்தை மீறி தனியார் ஜெட் விமானத்தை பரிசாக ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரதமர் லஞ்சம் பெற்றாரா என்பதை உறுதி செய்யும் வகையில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

2021 டிசம்பர் 31 ஆம் திகதி ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜெட் விமானம் மூலமான பயணம் குறித்த செய்திகள் பரவியதை அடுத்து, பிரதமரின் நெருங்கிய சகா ஒருவரால் இது பரிசளிக்கப்பட்டது என பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மரத்தில் மோதி விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள...

கம்பஹாவில் 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை

திருத்தப்பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்...