follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுடிஜிட்டல் ஆள் அடையாள திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி

டிஜிட்டல் ஆள் அடையாள திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி

Published on

இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்தை (Digital Identity Framework) நிறுவுதலை தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமாக முன்னுரிமை வழங்கி நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உயிரியல் அளவீட்டுத் தரவுகளின் (Biometric Data) அடிப்படையில் தனிநபர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் உபகரணம், இணையவெளியில் தனிநபர்களின் தனித்துவ அடையாளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய டிஜிட்டல் கருவி மற்றும் குறித்த இரண்டு கருவிகளையும் தொடர்புபடுத்துவதன் மூலம் டிஜிட்டல் மற்றும் பௌதீகச் சூழலில் தனிநபர் அடையாளத்தை திட்டவட்டமாக உறுதிப்படுத்தக் கூடிய அடையாளங் காணல் முன்மொழியப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்தின் கீழ் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இலங்கையில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவச் சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த நிதியளிப்பை பெற்றுக்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காகவும் ஏற்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், குறித்த நிதி வழங்கலின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...