2021 ஆம் ஆண்டு திருமதி இலங்கை அழகியாக தேர்வு செய்யப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் பட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய திருமதி இலங்கை அழகி ஏற்பாட்டு குழு பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
திருமதி உலக அழகி போட்டிக்காக, இலங்கை திருமதி அழகியை தெரிவுசெய்வதற்காக தமது அமைப்பு கொண்டுள்ள சட்டரீதியான அதிகாரத்துக்கமைய, இன்று முதல் புஷ்பிகா டி சில்வாவின் திருமதி இலங்கை அழகி பட்டத்தை, உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் எந்தவிதத்திலும் பயன்படுத்த தடை விதிப்பதாக தெரிவித்தார்.