அபாயகரமான எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்தமை தொடர்பில் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கான அறிவித்தல் தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
மனு தொடர்பில் மனுதாரர்கள் மற்றும் பிரதிவாதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனைகளை ஆராய்ந்ததன் பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.