கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை 14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது
புணரமைப்பு பணிகள் காரணமாக நாளை பிற்பகல் 4 மணி முதல் நாளை மறுதினம் காலை 6 மணி வரை 14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொடுகொட, ரஜ மாவத்தை, தெலதுற, கட்டுநாயக்க, சீதுவ, கட்டுநாயக்க விமானப்படை தள சுதந்திர வர்த்தக வலயம், உடுகம்பொல மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.