நாட்டில் ஆன்டிஜென் சோதனை கருவிகளின் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகள் உள்ளவர்களுக்கு மாத்திரம் கொவிட்-19 பரிசோதனையினை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
விநியோகஸ்தர்கள் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான சோதனை கருவிகளை மட்டுமே பெறுகின்றனர் எனவும் இதற்கு முன்னர் சில நாட்களுக்கு ஒருமுறை மில்லியன் கணக்கான பரிசோதனைக் கருவிகளைப் பெற்றதாகவும் ஆனால் தற்போது அவை பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.