கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் மோசடிகள் ஊடாக அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
அவ்வாறான மோசடியுடன் தொடர்புபட்ட பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்படுமென ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
2 உயர்தர பரீட்சை நிலையங்களில் நேற்று மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, நேற்று சித்திரப் பாடம் தொடர்பாகவே இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அவ் விரண்டு பரீட்சை நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன்.
முதலாவது வினாத்தாள் உரிய நேரத்திற்கு முன்னர் சேகரிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 6 மாணவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் சித்தரப் பாடத்தின் 2 வது வினாத்தாள் பெற்றுக்கொடுக்கப்படாமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்பட முடியாதவை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.