இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது கைப்பற்றப்பட்ட நான்கு இந்திய படகுகள் புத்தளத்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது கைப்பற்றப்பட்டு கற்பிட்டி ஆணவாசல் கடற்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 இந்திய மீனவப்படகுகளே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் தலைமையில் படகு ஒன்று தலா 51000 ஆயிரம் ரூபா வீதம் நான்கு படகுகளும் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டன.