follow the truth

follow the truth

May, 6, 2025
Homeவிளையாட்டுஅவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி

Published on

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டி:20 போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

முதல் நான்கு ஆட்டங்களிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று 4:0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்த நிலையில் ஐந்தாவதும், இறுதியுமான போட்டி இன்று மெல்போர்னில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா சார்பில் அதிகபடியாக மேத்யூ வேட் 43 (27) ஓட்டங்களையும், மேக்ஸ்வெல் 29 (21) ஓட்டங்களையும் பெற்றனர்.

155 என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றியை பதிவுசெய்தது.

இலங்கை சார்பில் அதிகபடியாக குசல் மெண்டீஸ் ஆட்டமிழக்காது 69 (58) ஓட்டங்களையும், தசுன் ஷாக்க 35 (31) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

எவ்வாறெனினும் அவுஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட டி:20 தொடரை 4:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...