ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் பொலிசாரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனியர்கள் நாட்டின் பிராந்திய பாதுகாப்புப் பிரிவுகளில் சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்ற செய்திகளுக்கு மத்தியில் இந்த ஆயத விநியோக செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் உக்ரைன் விமானப் போக்குவரத்து சேவைகள், தாக்குதலுக்கு உள்ளானதால், அந்த நாடு தமது வான்வெளியை மூடியுள்ளது இதனையடுத்து பொது விமான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன