உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை உக்ரைன் உத்தியோகபூர்வமாக துண்டித்துள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் இருந்து பிரிவினைவாதிகளின் பகுதிகளுடன் ராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளப்போவதாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.