சுமார் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் உணவகங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள பெருமளவிலான உணவுப் பொருட்கள் பழுதடைவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பல உணவுகளை அன்றாடப் பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டியிருப்பதால் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.