வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல் ஏற்பாட்டாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களின் மட்டத்தில் தன்சல்களைப் பதிவு செய்வது தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்கள் (உணவு தானம்) தொடர்பில் சுகாதார வழிமுறைகளுடனான பொதுவான அறிவுறுத்தல்களின் தொகுப்பை சுகாதார மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ளது.
முக்கியமாக முறையற்ற உணவு தயாரிப்பு முறைகள், முறையற்ற சேமிப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் இல்லாமல் உணவு தயாரிப்பதன் ஊடாக நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுவது தொடர்பிலும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க சரியான உணவு சுகாதார நடைமுறைகள் அவசியம் என்பதை உறுதி செய்வதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
எனவே, தன்சலவை ஏற்பாடு செய்யும் போது பின்வரும் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.