பாரா ஒலிம்பிக் கிராமத்தில் முதல் கொரோனா நோயாளி அடையாளம்

783

டோக்கியோ பாரா ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் விளையாட்டு வீரர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் 160 அணிகளைச் சேர்ந்த சுமார் 4400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, பாரா ஒலிம்பிக் ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள 70க்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே கொரோனா பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here