மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதியுடையவர்களின் விபரம்

1461

நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலாக்கப்பட்டுள்ள புதிய பயணக் கட்டுப்பாடுகளுக்கமைய, மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதியுடையவர்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, சுகாதார சேவைகள், பொலிஸ் மற்றும் முப்படைகள், அரச அதிகாரிகள், முக்கியமான உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொள்பவர்கள், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பவர்கள், அத்தியாவசிய சேவை வழங்குனர்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் மரணத்திற்கு செல்பவர்கள் (ஆதாரம் தேவை), மற்றும் துறைமுகங்களுக்கான பொருட்கள் அல்லது போக்குவரத்து மற்றும் விமான நிலையத்திற்கு செல்பவர்கள் ஆகியோருக்கு புதிய சுகாதார பயணக் கட்டுப்பாடுகளுக்கமைய, மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here