2020 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை ஈடுபடுத்தி, வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உப தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை ஒரு இலட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் உப தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.