இராணுவத்தினரை முறையற்ற விதத்தில் நடத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இராணுவ அதிகாரிகளுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதிக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பாதுகாப்பு செயலாளரும், பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாகாப்பு செயலாளர் ஆகியோரிடம் கோரியுள்ளார்.
இதேவேளை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது