மின்துண்டிக்கப்படும் நேரத்தில் ரயில் கடவைகளின் தடைகள் இயக்கப்படாமையால் குறித்த நேரத்தில் ரயில் கடவைகளை கடக்கும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான புகையிரதக் கடவைகள் நேரடியாக மணிகள், மின் விளக்குகள் போன்றவற்றின் மூலம் செயற்படுத்தப்படுவதாகவும் மின்சாரம் இல்லாத போது மின்கலங்களை அவற்றை இயக்குவதற்கு பயன்படுத்தினாலும் அவை இயங்குவதில்லை எனவும் தெரிவித்தார்.