ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

764

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டெம்பர் 3 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவிருந்தது.

எனினும் திங்களன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானைச் சுற்றியுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தொடரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் (ACB) தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் கொவிட்-19 நிலைமைகள் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவு காரணமாக தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here