மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று(25) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிவான் அழைப்பாணை விடுத்துள்ளார்.