கொரோனா வைரசிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதத்தின் முதல் வாரமளவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 75 வீதத்தை விட அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.