சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென லிட்ரோ நிறுவன தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.