follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1#BREAKING புதிய பிரதமரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்!

#BREAKING புதிய பிரதமரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்!

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை நிர்வகிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் புதிய அமைச்சரவைக்கு உதவுவதற்காக தேசிய சபையொன்றை நியமிப்பதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று காலை அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியதையடுத்து இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு (VIDEO)

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம்...

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7...