கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் முதல்முறையாக, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 8,920 ஆக பதிவாகியுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,920.71 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி இவ்வாறு உயர்தன்மையில் 8812.01 ஆக பதிவாகியிருந்தது.
பரிமாறப்பட்ட பங்குகளின் எண்ணிக்க 285,411,500 (285.41 மில்லியன்) ஆகவும் மொத்த புரள்வானது ரூபா 10,498,120,951.40 (ரூ. 10.49 பில்லியன்) ஆகவும் பதிவாகியிருந்ததாக கொழும்பு பங்கு சந்தை குறிப்பிட்டுள்ளது.