follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுஇன்று தனியார் பஸ்கள் இல்லை - CTB பஸ்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

இன்று தனியார் பஸ்கள் இல்லை – CTB பஸ்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

Published on

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகி செயற்பட தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து பேருந்து சேவைகளும் இன்று வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்றைய தினம் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (a)

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைதுக்கு முன்னதாக முன் பிணை கோரி ராஜித சேனாரத்ன மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தன்னை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக்...

கடல்சார் பகுதிகளில் பலத்த காற்றும் உயரமான அலைகளும் – பொதுமக்கள், மீனவர்களுக்கு எச்சரிக்கை

சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரை மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில்,...

கடும் நிபந்தனைகளுடன் துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொழும்பு ஹெவ்லொக் சிட்டி...