follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுமக்கள் பக்கம் நிற்பது யார், அரசாங்கத்துடன் யார் நிற்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும்

மக்கள் பக்கம் நிற்பது யார், அரசாங்கத்துடன் யார் நிற்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும்

Published on

பிரதி சபாநாயகர் தேர்வு வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த வேட்பாளரை ஆதரிப்பது மட்டுமே தனது ஒரே இலக்காக இருந்ததே தவிர மொட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளரை ஆதரிப்பது அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

என்றாலும் இறுதியில் நடந்தது சுயேச்சை என்று கூறும் குழுவால் முன்மொழியப்பட்ட வேட்பாளரே மொட்டுவின் வேட்பாளராக மாறியது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டுவின், பிரதமரைப் பிரதிநிதித்துவப்படுத்தி மொட்டுவின், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டுவின் ஆதரவைப் பெற்ற ஒரு வேட்பாளருக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நிபந்தனையின்றி மக்களுடன் முன்நிற்கும் தமது குழுவினரால் ஆடை அணிந்து வன்னம் மக்களுக்கு துரோகம் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் இறுதி சந்தர்ப்பமாக மக்கள் பக்கம் நிற்பது யார், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் யார் நிற்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சொத்து அறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு அபராதம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு...

SLIIT நிறுவனத்தை மகாபொல ஊடாக நிர்வகிக்கப்படும் நிறுவனமாக்க நடவடிக்கை எடுக்கவும் – கோப் குழு அறிவுறுத்தல்

மகாபொல நிதியத்திற்குச் சொந்தமான இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தை (SLIIT) முழுமையான தனியார் நிறுவனமாக மாற்றுவது சட்டவிரோதமானது என்றும்,...

ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் தோல்களை வீசும்போது கவனம் தேவை

ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்களை வீதியோரங்களிலும், வெவ்வேறு இடங்களிலும் வீசுவதைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்கள். பழங்களின்...