எரிவாயு வழங்கக் கோரி பொதுமக்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு வீதி பேலியகொடை நுகே சந்தியில் தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, வீட்டு எரிவாயு கொள்கலன்களை வழங்குவதற்கு போதியளவு எரிவாயு கையிருப்பு இல்லாததால், தேவையில்லாமல் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்றும் பல பகுதிகளில் எரிவாயு வழங்கக் கோரியும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.