பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீதும் போராட்டக்காரர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுடன், தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி, குருநாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இல்லம் மற்றும் அலுவலகம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் கட்டிடத்திற்கும் தீ வைக்கப்பட்டள்ளது.
இதனிடையே, மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லம் தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நாட்டின் பல நகரங்களில் அரசியல்வாதிகளின் கார்கள் பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.