அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு மக்களின் உரிமைகளை மீறி, தாக்குதல் நடத்த தலைமமைத்துவம் வழங்கிய அனைவருக்கும் எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்வதற்கான முழுமையான விசாரணையை நடத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகர எல்லைக்குள் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவத்தினால் நாடு முழுவதும் பாரிய நிலைமை உருவாகியுள்ளதாக சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைதியான முறையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பெருமளவான மக்கள் மேற்கொண்ட நடவடிக்கையானது நாட்டின் அரசியலமைப்பை மீறிய செயலாகவும் குற்றச் செயல் எனவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.