உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் எதிர்வரும் மாதங்களில் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் என ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த போர் காரணமாக, ஏழை நாடுகளில் விலைவாசி உயர்வால் உணவு பாதுகாப்பின்மை மோசமடைந்திருப்பதாக, ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரேனிலிருந்து ஏற்றுமதிகள் போருக்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுக்கப்படாவிட்டால், பல ஆண்டுகளாக நீடிக்கும் பஞ்சத்தை சில நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சூரியகாந்தி எண்ணெய், சோளம், கோதுமை உள்ளிட்ட தானியங்கள் உக்ரேனிய துறைமுகங்கள் வாயிலாக பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த நெருக்கடி காரணமாக விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இது உலக அளவில் விநியோகத்தைக் குறைத்து, மாற்று பொருட்களின் விலை உயர வழிவகுத்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த விலைகளைவிட, உலக அளவில் உணவுப்பொருட்களின் விலைகள் கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக, ஐ.நா. தெரிவித்துள்ளது.