அவுஸ்திரேலியாவில் குரங்கு அம்மை நோய் (monkey pox) வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நியு சௌத் வால்ஸ் (new south wales) மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் காணப்பட்ட இருவரிடையே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டு நாடுதிரும்பிய நபரொருவரே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, பிரித்தானியா, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் குரங்கு அம்மை என அழைக்கப்படும் அரிய வைரஸ் நோய் பரவுவது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.