கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நேற்று 22 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதற்கமைய இதுவரையில் மொத்தமாக 827 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அதற்கமைய நேற்று மாத்திரம் 161 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களில் நீதிமன்றத்தில் 80 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 90 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் மொத்தமாக 1220 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 540 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 570 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.