கொவிட் தடுப்பூசி பெற்ற சகல சுற்றுலா பயணிகளுக்கும் விசா அனுமதி

1203

அனைத்து நாடுகளையும் சேர்ந்த, பூரணமாக கொவிட் தடுப்பூசி பெற்றுள்ள சகல சுற்றுலா பயணிகளுக்கும் நாளை (30) முதல் விசா அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நாடுகளிலிருந்து வருகைதரும் சுற்றுலா பயணிகளும் இதில் உள்ளடக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் வைத்து கட்டாய Rapid Antigen பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமெனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இதுவரை AstraZeneca/Covishield, Moderna, Pfizer, Johnson & Johnson, Sinopharm, Sinovac ஆகிய கொவிட் தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here