அத்தியாவசிய காரணங்கள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

702

நாட்டில் தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் உண்மையான பலனை பெறுவதற்கு அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறும், அத்தியாவசிய காரணங்கள் தவிர வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸை விடவும் டெல்ட்டா திரிபானது மிகவும் வேகமாக பரவுவதாக சுகாதார அமைச்சின், பொது சுகாதார சேவைகள் உதவி பணிப்பாளர் விசேட வைத்தியர் சுசீ பெரேரா தெரிவித்துள்ளார்.

பக்கத்து வீட்டுக்கு கூட யாரும் செல்ல வேண்டாம் எனவும் 1 அல்லது 2 மீற்றர் தனிமனித இடைவெளியை பேணுவது கட்டாயம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்தோடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசங்களை அகற்ற வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here