பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இருவருக்கும் பரிசுத்தொகை

1285

2020 டோக்கியோ பராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் F46 பிரிவில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் பெற்றுக்கொடுத்த தினேஷ் பிரியன்தவுக்கு 5 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்குவதற்கு விளையாட்டுத் துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், பராலிம்பிக்கில் ஆண்களுக்கான F64 ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்த சமித்த துலான் கொடித்துவக்குக்கு 2 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here